Friday, 29 July 2011

நெல்லிகன்னி

கவிதைகளுக்காக என் கற்பனைகள் அர்ப்பணம்
கவிதைகள் அனைத்தும் உன் காலடியில் சமர்ப்பணம்...  

தேர்வில் 'முதல் மதிப்பெண்' பெற்று இனிப்பு வழங்கினாய்...
அன்று சுவைத்த இனிப்பு மட்டும்,
"நா" மட்டுமன்றி "நாளமெல்லாம்" இனித்தது...

கண்கள் கலந்த போது
"கற்கண்டாய்" இனித்தாய்...

தேடி தேடி பார்த்த போது
"தேன்பாகாய்" இனித்தாய்...

நீயும் என்னை பார்த்த போது
"நித்திரையிலும்" இனித்தாய்...

சிணுங்கி கொண்டே சிரித்த போது 
"செவ்வாழையாய்" இனித்தாய்...

அர்த்தமில்லாமல் ஆயிரம் வார்த்தைகள் பேசினாய்
அதன் அர்த்தங்களை சரியாக தன் புரிந்து கொண்டேன் நான்...
"தவறாக புரிந்து கொண்டீர்கள்" இது நீ...
முதல் முறை கசந்தாய்...

"பெற்றோர்கள் முக்கியம் தான்; நீயும் முக்கியம்" இது நான்...
"நீ முக்கியம் தான்; பெற்றோர்கள் ரொம்ப முக்கியம்" இது நீ...
நீ கூறியதில் பிழை ஒன்றும் இல்லை என்று இப்போது புரிகிறது எனக்கு..
ஆனால் அப்போது கசந்தாய்...

நெல்லிக்கனி முதலில் கசந்து "தண்ணீர்" குடித்த பின் இனிக்கும்.
நீ "பார்வை படலத்தில்" பயங்கரமாய் இனித்தாய்...
உன்னுடன் பேச ஆரம்பித்து,
"காதல்" என்னும் "பானம்" அருந்திய போது,
"எதிர்பார்ப்பு" என்னும் "எச்சிலோடு" சேர்ந்து சென்றது என்னுள்ளே...
அதன் பின் தான், கசந்தாய்..

முதலில் இனித்து பின்னர் கசந்த பெண்ணே நீ 
"வித்தியாசமான நெல்லிக்கனி"...