Tuesday 23 August 2011

கிறுக்கல்களின் தொகுப்பு

இதெல்லாம் நான் பள்ளிப்பருவத்தில் எழுதியவை... சில சின்னப்புள்ளத்தனமா இருக்கும். எழுதினப்போ, நான் சின்னப்பையன் தாங்க...

காதல் வெந்நீர்

காதலெனும் வெந்நீரில் குளிக்க
கதகதப்பாக தானிருக்கும்!!!
அந்த வெந்நீருக்கு விறகாக்கப்படுவது,
இளைஞனின் இலட்சியமும்,
பெற்றோரின் கனவுகளும் தான்...

உப்பிட்டவள் 

நம் உறவெனும் உணவிற்கு
உன் கண்ணீரால் உப்பிட்டவள் நீ!!!
அதனால் தான்,
மற்ற உறவுகளை விட,
உன் உறவு மட்டும் சுவைமிக்கதாய் ஜொலிக்கிறது...

பிருந்தாவனம்

ஆசையென்பது பூச்செடியானால்...
நேற்று வரை,
என் மனம் களர்நிலம்...
அதில் வீழ்ந்த உன் பார்வை துளிகளால்,
இன்றோ,
என் மனம் பிருந்தாவனம்...

கவிஞனாக்கிய நீ

காற்றை இசையாய் மாற்றும்
புல்லாங்குழல் போல..
கடப்பவனை கவிஞனாய் மாற்றும்
மந்திரமங்கை நீ...

பாஸ்கல்விதி 

'பாஸ்கல்விதி' பொய்த்துபோகிறது
அன்பில் மட்டும்...
அன்பின் 'ஆழம்' அதிகரிக்க அதிகரிக்க,
மனங்களின் 'அழுத்தம்' குறைகிறது...

விழிசேர்க்கை

 தாவரங்கள் 'சூரியனிடமிருந்து' சக்தி பெறுகிறது
'ஒளிசேர்க்கை' மூலம்...
நான் உன் 'பார்வையிலிருந்து' சக்தி பெறுகிறேன்
'விழிசேர்க்கை' மூலம்...

தங்கை

குழந்தைத்தனமும்,
குறும்புத்தனமும்,
குழைத்து தந்தெனை
குளிர்வித்தவள் நீ!
 பாசம் காட்டி, 
பந்தம் நீட்டி,
வாழ்வில் வர்ணம் தீட்டிய
வானவில் நீ!!

மனைவி

நாதங்களில் ஸ்வரம் மீட்ட,
நாணத்தோடு வருபவளை,
நாதஸ்வரங்களோடு
வரவேற்று விவாகமிக்கிறோம்...

Vibration mode

மற்ற அழைப்புகளுக்கெல்லாம்
என் அலைபேசி மட்டுமே துடிக்கும்...
உன் அழைப்பிற்கு மட்டும்,
அலைபேசியுடன்
என் ஆன்மாவும் துடிக்கும்...

ஒத்துழையாமை


நீ எதிர்படும் வேளையில் கண்களும்,
உன்னுடன் உரையாடும் வேளையில் நாக்கும்,
'ஒத்துழையாமை'யில் இறங்கிவிடுகின்றன...

நிலா

என் உலகம் அமாவாசையில் ஆழ்ந்தது,
'பகலில் உலா வரும் நிலா'
நின்னை காணாமல்...

ஒருதலைக்காதல்

வெளிப்படுத்தப்பட்ட காதல்கள்
பின்னாளில் கொச்சைபடுத்தபடலாம்.
உள்ளத்தில் உறைந்திருப்பவை என்றும்
புனிதம் இழப்பதில்லை...

மந்திரமங்கை

காற்றை இசையாய் மாற்றும்
புல்லாங்குழல் போல..
கடப்பவனை கவிஞனாய் மாற்றும்
மந்திரமங்கை நீ...