அக்கறை காட்டுவதால்,
அறிவுரை நீட்டுவதால்,
நலம் நாடுவதால்,
நல்வழி நடத்துவதால்,
நீ இன்னொரு தந்தை...
"புரிதலில் புலமை,
ஆளுமை திறனுள்ள ஆறுதல்,
அனைத்தையும்
நேர்த்தியாக பகிர்ந்து கொள்ளும் நேர்மை",
இவைகளால்
நீ என் 'நண்பன்'...
நீ என் 'நண்பன்'...
'வார்த்தைகளில் வழியும் வாஞ்சை,
திட்டும் போதும் சொட்டும் நேசம்,
திட்டும் போதும் சொட்டும் நேசம்,
கோபத்திலும் கொடுஞ்சொற்கள் வாரா நிதானம்',
இவற்றையெல்லாம் நான் கண்டது
உன்னில் மட்டும் தான்...
'உன் அனுபவம்'
எனக்கு பக்குவம் பயிற்றுவிக்கும் 'பாடம்',
'என் ஆசைகள்'
'என் ஆசைகள்'
நீ நிறைவேற்ற துடிக்கும் 'நேர்த்திக்கடன்'...
அண்ணா!
நீ எந்தன்
இரண்டாம் தந்தை,
நீ எந்தன்
இரண்டாம் தந்தை,
முதல் நண்பன்...
தங்கையற்ற வருத்தங்களை அதிகப்படியாக்குகின்றன தங்கள் வரிகள்..
ReplyDeleteஅன்பின் பொறாமைகள் தோழருக்கு..
மிக்க நன்றி நண்பா!!!
ReplyDeleteஎனக்கும் கூடபிறந்த தங்கை இல்லை!!!
உடன்பிறவா தங்கை உறவுகள் உண்டு....
சகோ
Deleteதம்பிகள் இருப்பதால் தயங்கியதில்லை..
தங்கைகள் இருப்பதால் என் கைகள் தளர்ந்ததுமில்லை...
/*
எனக்கும் கூடபிறந்த தங்கை இல்லை!!!
உடன்பிறவா தங்கை உறவுகள் உண்டு....*/
கூட பிறந்தால் மட்டுமா கூட பிறக்காத போதும் உணர்வுகள் ஒன்று தானே....
2nd appa nd 1st friend............... Idhu romba azhaga irukudhu.... Ella anna'kalum apdi nadandha romba nalla irukum.... Ipadi oru anna kidaithal adha vida sandhosam edhuvumae illa............... So cuteeeeee
ReplyDeleteதொலைவிலிருக்கும் என் தங்கை எனும் சூட்டிப்பெண்ணின் வார்த்தைகளை மீண்டும் பார்த்த உண்ர்வு....
ReplyDelete