Wednesday 23 November 2011

மன்னிப்பாயா???

கடிதம்,நினைவுகளை சுமந்துவருவது,
நிகழ்காலத்தில் ஆனந்தத்தையும்
பின்னாளில் சோகத்தையும் தரவல்லது.


எப்போதும் போல் இப்போதும் கண்ணீர்
இடர்பாடுகளுக்கிடைய படித்து முடித்தாள், 
கவிதை நிரம்பிய கடிதத்தை.
பிருந்தா...

இலக்கை சரியாக அடைந்த அம்பு போல மற்றொன்று எய்ய தெரியா வேடன்
போல்
பிரம்மனை ஆக்கியவள்.
இவள்போல இன்னொருத்தியை படைக்க தெரியவில்லை அவனுக்கு.
"பேரழகி"என்பதற்கு விரிவுரை தரும் அவள் உருவம். இவள் ஆசிரியர்பயிற்சி
முடித்து வீட்டில், தேர்வுமுடிவுக்காக காத்திருக்கிறாள்
முகநூலை திறந்தாள். அவளின் காதலனின் இருப்பை காட்டியது, அவனின் பெயர் அருகே இருந்த பச்சைப்பொட்டு 
பாலு...
காஞ்சிபுரத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். கவிதை எழுதுவது அவனுக்கு மிகபிடித்தமான ஒன்று. நல்லா பேசுவான் செண்டிமெண்டல் இடியட். 
"Hai..."இவள்,
தாமதத்தோடு "Hi..."அவன்
பிஸியா?
"இல்ல இல்ல! கிளம்பலாம்ன்னு நினைச்சேன். சொல்லு!"என்றான். 
"கெளம்ப
வேண்டியது தான,அப்புறம் என்ன சொல்லு? எதோ தியாகம் பண்ற மாதிரி" 
எப்போதும் இவர்களின் உரையாடல் இப்படி தானிருக்கும். 
சிறது நேர பேச்சுக்கு பின்,வழக்கம்போல தூக்கம்வருவதாக
சொல்லி புறப்பட்டான் காதலன். 
அவன் விடைபெற்றதும்,அவனது நினைவுகள் புழங்கதொடங்கிற்று.
நினைவுகளின் கேள்விகளுக்கு நிஜத்திடம் விளக்கமில்லை.
காதலை ஏற்றுக்கொள்ளும் வரை, அவனிடமிருந்து கிடைத்த பாசம்,
எங்கே போனது இப்போது? 
விரட்டியது
விடைதெரியா கேள்விகள்.



ற்றுமோரு  கடிதம் படிக்க தொடங்கினாள்.
மூக்கு புடைக்க புடைக்க
விம்மி விம்மி அழவைத்தது அக்கடிதம்.
இந்த கடிதம் எழுதிய காதலன் இப்போது
எங்கே தொலைந்து போனான்? 
இந்த கடிதம் எழுதிய நாட்களை அவனுக்கு நினைவுபடுத்த விரும்பி முகநூலில்
அந்த கவிதையை பகிர்ந்தாள்.
காலை எழுந்ததும் இந்த பகிர்தலை பார்த்த
பாலு,கடுங்கோபமுற்றான்.
அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான்.
கிட்டத்தட்ட
2மாதங்களுக்கு பின் அழைக்கிறான்,
அவளின் குரல் கேட்டதும் கோபம் கொஞ்சம்
குறைந்தது உண்மையெனினும் கோபத்தை விட்டுக்கொடுக்காமல் 
"ஏன் அந்த
கவிதையை FBல போட்டே?
"ச்சும்மா..."
"என்ன சும்மா?
அது நா உனக்காக எழுதினது
அத்தோட அந்த போஸ்ட்ல என் பேர கூட போடல நீ.. 
அது என்ன ஒன்னோடதா? 
இடைவிடாது பேசினான்.
எப்படி சொல்வாள், அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என. 
மௌனம் மட்டுமே பதிலாய் நின்றது. 
"ஒங்கிட்ட தான் பேசிகிட்டு
இருக்கேன்" 
"ஸ்ஸ்ஸாரி"
"இப்போ ஏன் அழுற?" 
மௌனம்ம்ம்ம்ம்... கோபம் வெகுவாக குறைந்தது.
அழைப்பு துண்டிக்கபட்டது... 
வனுக்கொன்றும் பாசம் இல்லாமல் போய்விடவில்லை. 
முன்பு போல் இப்போது பேசமுடிவதில்லை, இவன் மனதில் 
தனது நடத்தையில் எந்த தவறும் இல்லை என்பதை அழுத்தமாக நம்பினான். 
எல்லா உறவுகளிலும் ஆரம்ப நாட்களில் அதிகம் பேச வேண்டியிருக்கும், 
புரிதலை மேம்படுத்தி கொள்ள.. அதுவும் ஆண் பெண் உறவில் சொல்லவே தேவையில்லை.அவ்வுறவு முதிர்வு பெற்று பக்குவபட்டபின் 
அவ்வளவாக பேச வேண்டி இருப்பதில்லை. இதுவே அவள் கேள்விகளுக்கு 
இவன் எப்போதும் வைத்திருக்கும் விளக்கம்.   
வளுக்கோ,அவளது நாட்களில் நடப்பதை யாரிடம் 
பகிர்ந்துகொள்கிறாளோ அவர்களை நெருக்கமானவர்கள் என்று நினைப்பாள்.
ஆரம்பநாட்களில் பேசியது போலவே அவன் பேசிக்கொண்டிருக்க
வேண்டும் என்று.. 
வளை இவனுக்கு அறிமுகப்படுத்தியது சமூக இணையதளம் தான், 
முகநூல்... இவனது நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டது கூட அவளில்லை,
அவளது தோழி ஜெனிதா மேரி, அதுவும் இவனது எழுத்துக்கள் பிடித்துப்போய் ஏற்றுக்கொண்டாள்.
எழுத்துக்களில் பெரிதாக ஈடுபாடில்லை பிருந்தாவிற்கு..
எப்போது ஆன்லைனுக்கு வந்தாலும் இவளுக்கு Message செய்யாமல் இருக்கமாட்டான்.எல்லோருக்கும் பதில் அளிப்பது இவளது தனித்துவம்.
நம்மை மதிப்போரை நாமும் மதிக்க வேண்டும் என்பது இவள் எண்ணம்.
தனித்துவம் தானே? இந்த குணம் பெரும்பான்மையான பெண்களுக்கு 
இருப்பதில்லை,அப்படி இருந்தாலும், ஆண்கள் அதனை ஆபத்தான குணம்
என்று எண்ண வைத்துவிடுவர்.
ரம்ப நாட்களில் மனம் விட்டு பேச மாட்டாள் இவள். 
இவனது பாசமும், பேச்சும் வீழ்த்தியது, அவளின் வைராக்கியங்களை... 
கொஞ்சம் கொஞ்சமாய், ஆண்களிடம் 
சரியாக பேசாத இவள், இவனை கொஞ்சுகிற அளவுக்கு கவரபட்டாள்.
நட்பு காதலானது...
கவிதைகளே படித்திறாத பிருந்தாவை, 
இவன் கவிதைகளின் ரசிகையாக்கிவிட்டான்.
"குட்டிபாப்பா, செல்லம், புஜ்ஜிகுட்டி, மை பஸ்ட் பேபி,குட்டிம்மா"
இவைகள் இவர்களின் உரையாடலில் அதிகம் இடம்பெறும் வார்த்தைகள். 
தினமும் அவளை இவனோ, இவனை அவளோ நிறைகளை சொல்லி பாராட்டி, 
தான் எவ்வளவு நேசிக்கிறேன் என சொல்லி, 
கொஞ்சி கொஞ்சி தூங்கவைப்பர்.
ஒருநாள் இந்த சம்ரதாயங்கள் அரங்கேறாவிடினும் 
உறக்கமில்லா இரவுகளில் ஒன்று கூடும்.
ன் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத 
ஏக்கத்தோடு இருந்த இவனுக்கு, ஆனந்த விகடன் மூலம் 
அறிமுகப்பட்டது ட்விட்டர்
ட்விட்டரில் இவன் எழுத ஆரம்பித்து 15 நாட்களிலேயே 
அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக அங்கீகாரம் கிடைக்கபெற்றது. 
தூக்கிவிடும் நற்குணமுடையோர் நிறைந்த தளம் என்பதால் பயணம் வெற்றிபயணமானது.தொடர்பவர்கள் தரும் ஊக்கம் எந்நேரமும் 
ட்விட்டர் விட்டு வெளிவரா அடிமை ஆக்கியது. 
கனவு  மெய்ப்ப்படும்விதமாய் வலையும் பாய்ந்துவிட்டான்
(ஆனந்த விகடனில் வலைபாயுதே பகுதியில் இடம்பெற்றான்). 
விடுதலை விரும்பா அடிமை ஆகி போனான் த்விட்டருக்கு...
அலைபேசியில் அழைப்புகள் வந்தாலும் 
துண்டித்துவிட்டு த்விட்டரிலேயே ஊறி கிடப்பான்.
படித்துக்கொண்டிருக்கும் போதும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 
உள்ளே எட்டிபார்த்துகொண்டே இருப்பான் ட்விட்டரை.
இதை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முற்பட்டான்... 
அவள் உதிர்த்த கடைசி வார்த்தைகள் 
"சமூகவலைத்தளம், நம்மை சேர்த்து வைத்து, 
இன்று பிரித்தும் வைத்துவிட்டது...." 


28 comments:

  1. வார்த்தைகள் இல்லை இதற்கு பின்னூட்டமிட..
    நிதர்சன உண்மை

    ReplyDelete
  2. என்னங்க பயமுறுத்திரிங்க?? டிவிட்டரில் இப்படி ஒரு மைனசா? அழகான எழுத்து நடை! காதலை கவிக் கட்டுரை வடித்தால் அதுவும் பெண்ணின் பார்வை என்றால் அழகியலுக்கு குறைவே இருக்காது! :)

    ReplyDelete
  3. இலக்கியம் முக்கியமல்ல வாழ்க்கையே முக்கியம் என்பது எழுத்தாளர் நபிச்சமூர்த்தியின் வரிகளுள் முதன்மையானது..

    இலக்கியம் வாசித்து கனவிலேயே காலம் தள்ளிய தலைமுறை கடந்து போய் சமூக வலைத்தளங்கள் என சொல்லப்படுபவற்றில் தம்மை இழக்கும் மனிதர்களாக நாம் மாறி விட்டோம்..

    மிக அருமையான பதிவு.. வலிக்கச் செய்கிறது.. பிரிவின் கணங்கள் இல்லாது போகட்டும்.. கானல் நீரில் தாகம் தனித்ததெல்லாம் போதும் போதும்..

    ReplyDelete
  4. ஹி ஹி..ஆமாம்..புகழ் போதை அடிமையாக்கி விடும்....நல்லா இருக்கு படிக்க....# குரு

    ReplyDelete
  5. ///எப்போதும் போல் இப்போதும் கண்ணீர்
    இடர்பாடுகளுக்கிடைய படித்து முடித்தாள்,
    கவிதை நிரம்பிய கடிதத்தை/// ச்ச அருமையா எழுத்த கையாண்டுருக்கய்யா..!

    ReplyDelete
  6. திருமாறன்.தி23 November 2011 at 12:38

    நல்ல முயற்சி தோழரே. நடை இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமாக இருந்திருக்கலாம்.தொடருங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நன்று நண்பரே.. இணையமே கதி என்று இருந்தால் என்னவாகும் என்பது குறித்து நல்ல நடையில் எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. என்னடா உருகி உருகி எழுதி இருக்க??? கதையல்ல நிஜம் ஆகாம இருந்த சரி......

    ReplyDelete
  9. நல்லா இருக்கு பாலு , எது உன் காதல் தோல்வி, ஏன்னா அப்ப தான் இன்னொரு பொண்ண லவ் பண்ண முடியும்

    ReplyDelete
  10. பாலுவின் அனுபவமா? எதார்த்தம்.

    ReplyDelete
  11. நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே!!!
    சொந்த அனுபவம் அல்ல கற்பனையே...
    ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  12. கடைசி கமெண்ட் படிச்சதுக்கு அப்புறம்தான் நிம்மதி. நான் உண்மைனே நினைச்சிட்டேன். ஆனா ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நிறைய இடங்களில் இருந்த வர்ணனை எல்லாமே கலக்கல் :))

    சமூக வலைத்தள காதல் அதன் மூலமே பிரிய நேர்ந்ததா சொல்லியிருக்கிறதும் சூப்பர்!

    மொத்தத்துல காதல் உணர்வ தட்டி எழுப்பிட்டீங்க :))

    ReplyDelete
  13. நானும் ஆஜர்!
    பாலு சார்... நல்லா இருக்கு!
    வரிகளுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைத்து விடுங்கள். பார்க்க அழகாக இருக்கும்.

    நன்று.

    ReplyDelete
  14. கற்பனையே என்றாலும் நிஜம் போலவே இருந்தது பாலு வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் :)
    by
    umakrishh..

    ReplyDelete
  15. அருமை பாலா!!

    வார்த்தை ஜாலங்களை விட நேர்மையான , உண்மையான எழுத்து என்றுமே கூடுதல் அழகாக இருக்கும்.

    "சமூகவலைத்தளம் தான் நம்மை சேர்த்து வைத்து,
    இன்று பிரித்தும் வைத்துவிட்டது...." என்பது எவ்வளவு அழகான வருத்தமான உண்மை.

    படங்களும் அருமை.
    வாழ்த்துக்கள் பாலா !

    ReplyDelete
  16. The evils of social network! நிறைய பேர் சமூக வலைதளத்தில் அடிக்ட் ஆகிவிடுகிறார்கள். உங்கள் கதை காதல் முறிவை சொல்லுகிறது, மண முறிவுகளும் ஏற்பட அதிக சாத்திய கூறுகள் உள்ளன. நன்றாக எழுதியூள்ளீர்கள்.
    amas32

    ReplyDelete
  17. நல்லா இருக்குங்க! சூப்பர் கதைக்களம்!

    ReplyDelete
  18. காதல் எதன் மீது இருப்பினும் காதலே ! அவளை விட அதிகமாய் அவன் இன்னொன்றை காதலிக்க விட்டது அவள் தவறே! அருமையான பதிவு மச்சி தொடருங்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அருமையான பதிவு மச்சி. அவளை விட அதிகமாய் அவன் மற்றொன்றை காதலிக்க விட்டது அவள் தவறே! வாழ்த்துகள் மச்சி

    ReplyDelete
  20. முதலில் உண்மைன்னு நம்பி அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. ஹிஹி.உண்மைக்கு மிக அருகில் எழுதியதற்கே ஒரு சபாஷ்..ஏன்னு தெரியலை இரண்டாவது தடவை படிச்சதும் தான் கதை முழுமையா புரிஞ்சு நிறைவை தந்தது.நல்ல கவிதை நடை.. தொடர்க..

    ReplyDelete
  21. பாலுத்தம்பி மனசிலேனு ஒரு படம் வந்தது. நான் போஸ்டர்தான் பார்த்தேன். இப்பதான் படிச்சேன். குடும்ப உறவுகள் சமூகவலைத்தளங்களால் பாதிக்கப் படும் அபாயத்தை ஒரு காதல் தோல்வி மூலம் அழகாக கூறியுள்ளீர். வாழ்க வளர்க! @SeSenthilkumar

    ReplyDelete
  22. நன்று!!கவிதை நடை சிலசமயங்களில் பெரிதாய் ஈர்ப்பதில்லை!இந்த கதை எளியநடையில் இருந்திருந்தால் இன்னும் மிக அருமையானதாக்கம் கொண்டிருக்கும்!என் வரையிலான கருத்து!!

    ReplyDelete
  23. வலைத்தளங்களின் உதவியும் உபத்திரவமும்... வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  24. இதற்க்கு கமெண்ட் சொல்லும் அளவுக்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை .. அவ்வளவு அருமை. இதை அனுபவித்து எழுதியது போல் தோன்றுகிறது,.. அனுபவம் தான் மனிதனின் எழுத்துக்கு ஊன்றுகோல் !!
    உங்களிடம் திறமை உள்ளது !! all the best!!

    ReplyDelete
  25. உரைநடையும் கவிதை நயமும் கலந்த நடை. நன்றாகவே வந்திருக்கிறது பாலு..

    என்னதான் இதை சொந்த அனுபவம் இல்லை என்றாலும், ஆமென்கிறது எழுத்தின் அழுத்தம். இல்லையெனினும் - ஆமெனினும் எழுதி மேற்செல்ல வாழ்த்துகள்.

    //எப்படி சொல்வாள், இவள் அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என. //

    ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்த்து, இது போன்ற வாக்கியப் பிழைகளைத் தவிருங்கள்.


    (என்னையெல்லாம் சீரியஸா அட்வைஸ் பண்ண வெச்சே சீனியராக்கறீங்கப்பா.. ச்சே.. பேட் பாய்ஸ்!)

    ReplyDelete
  26. எல்லா உறவுகளிலும் ஆரம்ப நாட்களில் அதிகம் பேச வேண்டியிருக்கும்,
    புரிதலை மேம்படுத்தி கொள்ள.. அதுவும் ஆண் பெண் உறவில் சொல்லவே தேவையில்........////

    சூப்பர்.. அடிக்கடி எழுதுங்க தல....

    ReplyDelete
  27. நல்ல படைப்பு

    கான்வர்ஷேஷனை தனியா கேப் விட்டு போடுங்க

    ReplyDelete
  28. // எப்படி சொல்வாள், அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என.
    மௌனம் மட்டுமே பதிலாய் நின்றது.
    "ஒங்கிட்ட தான் பேசிகிட்டு
    இருக்கேன்"
    "ஸ்ஸ்ஸாரி" //

    செம டச்சிங் பாஸ். ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அருமையா எழுதி இருக்கிங்க.

    ReplyDelete

படிச்சிட்டிங்களா? என்ன சொல்ல தோனுது? இங்கே இடுங்களேன்... நீங்கள் தரும் பின்னூட்டம், தவறிருப்பின் திருத்திகொள்ளவும், நிறைகளை இன்னும் மேம்படுத்திகொள்ளவும் உதவும். இதனை படிக்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதை என்னுடன் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டுகொள்கிறேன்...