Thursday 22 September 2011

நடைபாதைவாசிகள்

இந்த பதிவு சென்னையில் நடைபாதையில் வசிக்கும் 
மக்களின் வாழ்க்கை பற்றியது....
என் மனதை வெகுவாக பாதித்த 
அவர்களின் வாழ்க்கை முறையை 
என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன்.


வாகனபுகையும், தூசியும்,
அட்சதை தூவ அரங்கேறும் சமையல்
எங்கள் உணவு
எப்போதும் சோறு
கட்சிகூட்டம் என்றால் கிட்டும் பிரியானி;

தேர்தல்பிரச்சார நாட்களில்
வேட்பாளர்களை விட நாங்கள் பரபரப்பாய்
இருப்போம்-தினம் ஒரு பொதுக்கூட்டம்

கடல்போல் தான் நாங்களும்
கழிவை வெளியேற்ற கடற்கரையை நாடுவோம்...

மழை பெய்தால் மற்றவர்கள் துக்கம் துடைக்கப்படும் 
எங்கள் தூக்கம் துறக்கப்படும்

போர்வைஇன்றி படுத்தால்
இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... 
போர்வைக்குள் புதைந்தவுடன் 
வியர்வை அபிஷேகத்திலும்
விரைவாய் விழிவந்தடையும் உறக்கம்

போர்வை மூடியபடி,
திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...

உடல் ஒவ்வாமையிலும் 
படுக்கை காணாது எங்கள் பகல்...

இருளை பாதுகாவலன் ஆக்கி
பார்வையாளர்கள் உறங்கிய பின்
நடுநிசியில் உடல் நனைப்பது தான்
'எங்கள் குளியல்'  

எங்கள் குடும்பமும் பல்கலைகழகம் தான்
திறந்தவெளி பல்கலைகழகம்...

அனைவரும் நோக்கும்படி தான் 
எங்கள் வாழ்வே, 
எவரும் உற்று நோக்குவதுதில்லை
எங்கள் வாழ்வை...    

24 comments:

  1. உண்மை. உற்று கவனித்ததில்லை இவர்களை. கவனித்து சொன்னதும் கண்கள் பனிக்குது.!
    மனதை தொடும் பதிவு.!ளை. கவனித்து சொன்னதும் கண்கள் பனிக்குது.!
    மனதை தொடும் பதிவு.!

    ReplyDelete
  2. தினமும் கடந்து செல்லும் போது என்ன வாழ்க்கை இது என்று நினைத்திருக்கிறோம்....அவர்களின் வலியை கவிதையாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் மச்சி....

    ReplyDelete
  3. எத்தனை உண்மையான வார்த்தைகள்..இவர்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ சலனம் ஏற்படும்..அதை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கீங்க..

    ReplyDelete
  4. நடை பாதை னு படிச்சதும் அங்காடி தெருவில் வரும் பாடலே (கதைகளை பேசும் ,,,,,) நினைவுக்கு வந்தது .உங்கள் பதிப்பு அவர்களின் வாழ்க்கையை உங்கள் வரிகளில் அடக்கி விட்டீர்கள். நிஜம் .மிகவும் அருமை .தொடருங்கள்

    ReplyDelete
  5. நல்ல பதிவு தம்பி ...
    //போர்வை மூடியபடி,
    திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...//
    அருமை!!
    விரைந்துச்செல்லும் வாழ்க்கையில் இத்தகையோரை நாளும் கடக்கும் நாம் யோசிப்பதுண்டு சிலவேளைகளில்
    கடந்துவிடுவதுண்டு பல "வேலை"களில்
    wordverification not necessary i think

    ReplyDelete
  6. நடை வழி கவிதை..வலிக்கச் செய்கிறது மனதை..

    வெறுமெனே கடந்து செல்பது மனிதர்கள் அல்ல, மனிதம்!

    ReplyDelete
  7. @பத்மினி : முதல் கமென்ட் போட ஆசைப்பட்ட தங்கள் அன்புக்கு நன்றி தல! பர்ராட்டுகளுக்கு மிக்க நன்றி!!!

    @கிச்சா :வரிகள் குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா!!!

    @carfire : மிக்க நன்றி மச்சி...

    @கணேஷ் : மனமார்ந்த நன்றிகள் நண்பா...

    @மித்ரா : பாராட்டியமைக்கும், ஊக்குவிப்பிற்கும், நன்றி!!1 கண்டிப்பாக தொடர்வேன்!!

    @அ.முத்துபிரகாஷ் : மிக்க நன்றி சகா!!!

    @அனைவருக்கும் : ஊக்குவிப்பிற்கும் ஆதரவிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்... தொடரட்டும் நம் பந்தம்...

    ReplyDelete
  8. Heart touching Lines Balu....!
    Keep on posting ....!

    ReplyDelete
  9. Good. u are sharpening your words day by day. vazhthukkal!!

    ReplyDelete
  10. அருமை, கண்கள் பணிந்தன, தெடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. >>அனைவரும் நோக்கும்படி தான்
    எங்கள் வாழ்வே,
    எவரும் உற்று நோக்குவதுதில்லை
    எங்கள் வாழ்வை...

    ஃபினிஷிங்க் டச் டாப்!!!!!!!!!!!

    ReplyDelete
  12. மிக மிக அருமை...கண்களை பணிக்க செய்கின்றன வரிகள்..தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. கவிதைக்கான களம், சொல்லாடல்கள் உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்துகின்றன. பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  14. நல்ல கருக்களம்.நல்ல முயற்சி.நிறைய படியுங்கள்,தொடர்ந்து எழுதுங்கள்!வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. Ipadiyum oru life irukudhunu yosika vachitiga balu... Too good.... Do more writings like this..

    ReplyDelete
  16. really super , nala kavithai... keep on writing..

    ReplyDelete
  17. Idha madri na idhuvaraikum vaasichadhu illa............... Good try.............. Write about more social things....

    ReplyDelete
  18. ந்ல்லா இருக்கு பல...அருமை..சில வலிகளை பதிவு செய்திருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  19. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  20. அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே.. சிறந்த எழுத்து நடை உண்மை வரிகளின் ஆழம் பாதித்தது... தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  21. எல்லா கவிதைகளையும் படிச்சிட்டேன்.நல்ல முயற்சி.இந்த கவிதை மிக நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  22. ஒவ்வொரு முறை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எங்கள் சாளிக்ராமம் வீட்டிற்கு செல்லும் போது உதயம் சினிமா அரங்கம் அருகே நடை பாதையில் படுத்துறங்கும் எளியவர்களை பார்க்கும் போது மனம் பதறும். அதுவும் நாம் விமானத்தில் இருந்து வரும்போதோ அல்லது உறவினரை அழைத்து வரும்போது ஏற்படும் நிகழ்வில் இருப்போர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வு பூதாகாரமாகத் தெரியும். என் மன எண்ணங்களை கவிதையாக வடித்தமைக்கு நன்றி!
    amas32

    ReplyDelete
  23. போர்வைஇன்றி படுத்தால்
    இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... super

    ReplyDelete

படிச்சிட்டிங்களா? என்ன சொல்ல தோனுது? இங்கே இடுங்களேன்... நீங்கள் தரும் பின்னூட்டம், தவறிருப்பின் திருத்திகொள்ளவும், நிறைகளை இன்னும் மேம்படுத்திகொள்ளவும் உதவும். இதனை படிக்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதை என்னுடன் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டுகொள்கிறேன்...